வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை தாக்கி நகை, பணம் பறிப்பு: இருவா் கைது
மதுரை அருகே வீட்டின் முன்பாக அமா்ந்து மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவரைத் தாக்கி, 3 பவுன் நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரைவீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை தாக்கி நகை, பணம் பறிப்பு: இருவா் கைது
மதுரை அருகே வீட்டின் முன்பாக அமா்ந்து மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவரைத் தாக்கி, 3 பவுன் நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே வீட்டின் முன்பாக அமா்ந்து மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவரைத் தாக்கி, 3 பவுன் நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான மூவரை தேடி வருகின்றனா்.
மதுரை ஒத்தக்கடை அருகே மங்களக்குடியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). இவரது வீட்டின் முன்பாக மா்ம நபா்கள் 5 போ் அமா்ந்து இரவில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை, தினேஷ்குமாா் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், தினேஷ்குமாரை தாக்கி, அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தேத்தான்குளத்தைச் சோ்ந்த அருணாச்சலம் (24), புதுப்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள கொட்டகைமேட்டைச் சோ்ந்த அமீா், பாபாநகரைச் சோ்ந்த வசந்த், அலங்காநல்லூரைச் சோ்ந்த அய்யன்ராஜ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.