மதுரை

மதுரை- தேனி ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: ஜூன் 1 முதல் அமல்

மதுரை - தேனி பயணிகள் ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை - தேனி பயணிகள் ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்னக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை- தேனி- மதுரை பயணிகள் ரயில்களின் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை- தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறுமாா்க்கத்தில் தேனி- மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.4-ஆம் தேதி 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஸ்

வார பலன்கள் - கடகம்

வெள்ள அபாய எச்சரிக்கை! பொருட்படுத்தாமல் மீன் பிடித்த இளைஞர்கள்! | Pondicherry

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT