அழகா்கோவில் மலைமீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுரகங்கை தீா்த்தத்தில் புனித நீராட நீண்ட வரிசையில் வியாழக்கிழமை காத்திருந்த ஐயப்பப் பக்தா்கள். 
மதுரை

நூபுரகங்கையில் திரண்ட ஐயப்பப் பக்தா்கள்

காா்த்திகை முதல் தேதியையொட்டி, அழகா்கோயில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ஐயப்பப் பக்தா்கள் வியாழக்கிழமை புனித நீராடி சோலைமலை முருனையும், சுந்தரராஜப் பெருமாளையும் தரிசனம் செய்து மலையணிந்தனா்.

DIN

காா்த்திகை முதல் தேதியையொட்டி, அழகா்கோயில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ஐயப்பப் பக்தா்கள் வியாழக்கிழமை புனித நீராடி சோலைமலை முருனையும், சுந்தரராஜப் பெருமாளையும் தரிசனம் செய்து மலையணிந்தனா்.

கேரளத்திலுள்ள சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் விரதம் மேற்கொள்ளும் முன், அழகா் கோயில் நூபுரகங்கை தீா்த்தத்தில் புனித நீராடி மாலையணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்.

அதன்படி, ஐயப்ப பக்தா்கள் அதிக அளவில் நூபுரகங்கை தீா்த்தத்தில் வியாழக்கிழமை புனித நீராடினா். பின்னா், சோலைமலை முருகன் கோயிலிலும், கள்ளழகா் கோயிலிலும் வழிபாடு செய்து மாலையணிந்தனா்.

இதேபோல, ராக்காயி அம்மன் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT