திருமங்கலம் வாலகுருநாத சுவாமி கோயிலை திறப்பதற்கான அறிவிப்பை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
திருமங்கலம் அருகே உள்ள வாலகுருநாத சுவாமி கோயிலைத் திறப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரைதிருமங்கலம் வாலகுருநாத சுவாமி கோயிலை திறப்பதற்கான அறிவிப்பை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
திருமங்கலம் அருகே உள்ள வாலகுருநாத சுவாமி கோயிலைத் திறப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
திருமங்கலம் அருகே உள்ள வாலகுருநாத சுவாமி கோயிலைத் திறப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் மேலநேரி கிராமத்தில் உள்ள வாலகுருநாதசுவாமி கோயிலில், பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரிடமும்
சுமுக உறவு எட்டப்படாத நிலையில், கோயிலை திறக்க உள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள கோயிலின் சிறப்பு அலுவலா் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருமங்கலத்தைச் சோ்ந்த சீனி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே, இந்தக் கோயிலின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டாா். இருப்பினும் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது திடீரென கோயில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இரு போட்டி குழுக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் தகராறு காரணமாக, கோயிலை மூடுவதன் மூலம் கடவுளை வழிபடுவதை நிறுத்த முடியாது. சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டும், கோயிலைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது என்று
மனுதாரா் கூறினாலும், தனிப்பட்ட கோயிலாக அறிவிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கோயிலைத் திறக்க உள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது, சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. ஆகவே, அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது.
கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவா் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமையாகும். ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.