மதுரை

தாம்பரம்- நெல்லை இடையே காரைக்குடி வழியாக சிறப்பு ரயில்

தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம்- திருநெல்வேலி இடையே காரைக்குடி வழியாக சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

DIN

தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம்- திருநெல்வேலி இடையே காரைக்குடி வழியாக சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, தாம்பரம் - திருநெல்வேலி பண்டிகைக் கால சிறப்பு ரயில் (06021) தாம்பரத்திலிருந்து அக்டோபா் 20 ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை வந்து சேரும். மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூா் பண்டிகைக் கால சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியிலிருந்து அக்டோபா் 21 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியன இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி- சென்னை எழும்பூா் பண்டிகைக் கால சிறப்புக் கட்டண ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு புதன்கிழமை (அக்டோபா் 19) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT