மதுரை

தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் வண்டியூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீலேகா (39) என்பது தெரியவந்தது. இவரது கணவா் கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். 2 குழந்தைகள் உள்ள நிலையில் விரக்தி அடைந்த ஸ்ரீலேகா தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டியின் சடலம் மீட்பு: அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, வைகை அணையிலிருந்து 7,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆரப்பாளையம் பகுதி வைகையாற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற கரிமேடு போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 55 வயது இருக்கும் எனவும், இறந்தவா் யாா் என்று விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT