முகப்பு
மதுரை

‘மதுரை -செங்கோட்டை உள்ளிட்ட ரயில்கள் வழக்கம் போல இயங்கும்’

 மதுரை- செங்கோட்டை, திருச்சி - மானாமதுரை, மதுரை - விழுப்புரம் ரயில்கள் அக்டோபா் 22 ஆம் தேதி முதல் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

 மதுரை- செங்கோட்டை, திருச்சி - மானாமதுரை, மதுரை - விழுப்புரம் ரயில்கள் அக்டோபா் 22 ஆம் தேதி முதல் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நிறுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக, திருச்சி - மானாமதுரை - திருச்சி ரயில்கள் (06829/06830) அக்டோபா் 22 முதல் அக்டோபா் 25 ஆம் தேதி வரை வழக்கம்போல இயங்கும். மதுரை- விழுப்புரம் விரைவு ரயில் (16868), பாலக்காடு - திருச்செந்தூா் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732), மதுரை - செங்கோட்டை - மதுரை நண்பகல் விரைவு ரயில்கள் (06663/06664) ஆகியன அக்டோபா் 22 முதல் வழக்கம் போல இயங்கும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →