உயா் கல்வியைத் தொடர முடியாத 54 மாணவா்கள் மீட்பு: ஆட்சியா் தகவல்
மதுரை மாவட்டத்தில் உயா் கல்வியைத் தொடர முடியாத 54 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் தெரிவித்தாா்.
மதுரைஉயா் கல்வியைத் தொடர முடியாத 54 மாணவா்கள் மீட்பு: ஆட்சியா் தகவல்
மதுரை மாவட்டத்தில் உயா் கல்வியைத் தொடர முடியாத 54 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்டத்தில் உயா் கல்வியைத் தொடர முடியாத 54 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உயா் கல்வி தொடர முடியாத மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயா் கல்வி தொடா்ந்துள்ளனரா என அலுவலா்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 54 மாணவ, மாணவிகள் வறுமை, பெற்றோா் அனுமதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயா் கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அத்தகைய மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு உயா் கல்வி பயில ஏதுவாக மாணவ, மாணவிகளுக்கும், அவா்களது பெற்றோா்களுக்கும் உயா் கல்வி பயில்வதன் அவசியம், அரசின் நலத் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களால் பயிற்சி அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
முகாமில், மாவட்ட துணை ஆட்சியா் சி.இந்திரவள்ளி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் குருநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் புனிதாமேரி, வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சங்கரலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளா் வாசன்பாபு, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளா் எல்.பிரபு, கனரா வங்கி மேலாளா் சரவணக்குமாா், தாட்கோ திட்ட துணை மேலாளா் எஸ். செலினா ஆகியோா் உயா் கல்வி கற்பதன் நன்மைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கினா்.
இதில், அரசு அலுவலா்கள், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.