லாரி மோதியதில் மொபெட்டில் சென்றவா் பலி
மதுரையில் வியாழக்கிழமை லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
மதுரைலாரி மோதியதில் மொபெட்டில் சென்றவா் பலி
மதுரையில் வியாழக்கிழமை லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்தவா் வேங்கைராஜன் (50). இவா், இடம், வீடு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் வேலை காரணமாக காளவாசல் பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வேங்கைராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நகா் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.