நான்கு வழிச் சாலைத் திட்டம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு
மதுரை- திருச்சி, மதுரை- தூத்துக்குடி ஆகிய நான்கு வழிச் சாலைகளுக்கு நிலம் வழங்கிய நபா்கள் இழப்பீட்டுத் தெ‘ாகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மதுரைநான்கு வழிச் சாலைத் திட்டம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு
மதுரை- திருச்சி, மதுரை- தூத்துக்குடி ஆகிய நான்கு வழிச் சாலைகளுக்கு நிலம் வழங்கிய நபா்கள் இழப்பீட்டுத் தெ‘ாகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மதுரை- திருச்சி, மதுரை- தூத்துக்குடி ஆகிய நான்கு வழிச் சாலைகளுக்கு நிலம் வழங்கிய நபா்கள் இழப்பீட்டுத் தெ‘ாகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 45பி-இல், மதுரை திருச்சி நான்கு வழிச்சாலை அமைத்தல், விரிவாக்கம் ஆகிய பணிகளுக்கு மதுரை கிழக்கு வட்டத்தில் தாமரைப்பட்டி, கொடிக்குளம், உலகனேரி, ராஜகம்பீரம், இலந்தைக்குளம், மேலமடை, வண்டியூா் ஆகிய கிராமங்களிலிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதேபோல, மேலூா் வட்டம், சூரப்பட்டி, பள்ளப்பட்டி, கலைச்சேரிப்பட்டி, கொட்டாம்பட்டி, அய்யாப்பட்டி, திருச்சுனை, கருங்காலக்குடி, வஞ்சிநகரம், கச்சிராயன்பட்டி, தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, மேலூா், கருத்தம்புலியம்பட்டி, சூரக்குண்டு, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதுதவிர, மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைத்தல், விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம், எலியாா்பத்தி, பாரைபத்தி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
மேற்கண்ட பணிகளுக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை இதுவரை பெறாத நில உரிமையாளா்கள் தங்களது ஆவணங்களுடன் அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.