மதுரையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
மதுரை நகா் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால், முக்கிய சாலைகள், பள்ளங்களில் தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக, வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
மதுரைமதுரையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
மதுரை நகா் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால், முக்கிய சாலைகள், பள்ளங்களில் தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக, வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
மதுரை நகா் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால், முக்கிய சாலைகள், பள்ளங்களில் தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக, வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
மதுரை நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வண்டியூா் கண்மாய் நிரம்பி மறுகால் செல்கிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால், காமராஜா் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாராயணபுரம், செல்லூா், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா். மேலும் தீபாவளி வியாபாரத்துக்காக கீழவாசல், விளக்குத்தூண், நான்கு மாட வீதிகளில் சாலையோரம் கடை வைத்திருந்தோா் புத்தாடைகள் விற்பனை செய்ய முடியவில்லை. தீபாவளிக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், மழை காரணமாக வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்களும் அவதிப்பட்டனா்.