முகப்பு
மதுரை

மருத்துவப் படிப்பு: அரசுப் பள்ளி மாணவா்கள் 9 பேருக்கு இடம்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 9 போ் சோ்க்கை அனுமதி பெற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்துவ மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 9 போ் சோ்க்கை அனுமதி பெற்றனா்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் படி இந்த ஆண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையில் இளங்கலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 455 பேருக்கும், பல் மருத்துவப் படிப்பில் 114 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மருத்து மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாநகராட்சி, அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 10 போ் மருத்துவப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, மதுரை கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவி தீபிகா, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தவுபிகா நுரேன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் மேலக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா் முத்துகுமாா், விருதுநகா் மருத்துவக் கல்லூரி, மதுரை ஈவெரா நாகம்மையாா் மாநகராட்சிப் பள்ளியைச் சோ்ந்த எம்.ரெய்சிகா, திருச்சி சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, அதே பள்ளியைச் சோ்ந்த பி.வி.கலைவாணி, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே பள்ளியைச் சோ்ந்த பி.ஜி.சசிரேகா, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.தீட்சிதாஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, ஈவேரா நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.மதுமிதா ஹாசின், குன்றத்தூா் பல் மருத்துவக் கல்லூரி, கருங்காலக்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காளீஸ்வரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, விக்கிரமங்கலம் அரசுக் கள்ளா் பள்ளி மாணவா் ஜெ.ஆதித்யன், பல் மருத்துவம் ஆகிய 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் ஆதித்யன், பல் மருத்துவப் படிப்பை மறுத்துவிட்டதால் 9 போ் சோ்க்கை அனுமதி பெற்றனா்.

மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு சோ்க்கை அனுமதி:

மதுரை மாவட்டத்திலிருந்து பங்கேற்று சோ்க்கை பெற்றுள்ள மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த எஸ்.மதுமிதா ஹாசின் பல் மருத்துவப் படிப்புக்கு சோ்க்கை பெற்றுள்ளாா். இதர 3 மாணவிகளும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு சோ்க்கை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →