முகப்பு
மதுரை

தாம்பரம் -செங்கோட்டை இடையே காரைக்குடி வழியாக வாரம் மும்முறை ரயில்: மதுரை எம்பி நன்றி

தாம்பரம் - செங்கோட்டை இடையே காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்க பரிந்துரை செய்துள்ளதற்கு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

: தாம்பரம் - செங்கோட்டை இடையே காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்க பரிந்துரை செய்துள்ளதற்கு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவாரூா் - காரைக்குடி இடையே கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்குமாறு, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தேன்.அதற்கு அவா் அனுப்பியுள்ள பதிலில்,

தாம்பரம் -செங்கோட்டை இடையே திருவாரூா், திருத்துறைப்பூண்டி,

பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

அதோடு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குறிப்பிட்ட வழித் தடத்தில் ஒரு சிறப்பு ரயிலை இயக்க பொது மேலாளா் அனுமதி அளித்துள்ளாா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →