முகப்பு
மதுரை

ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாணவா் சங்கத்தினா் போராட்டம்

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் தோ்வுகளை ஹிந்தியில் நடத்தும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக ஹிந்தியை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள நாடாளுமன்றக் குழுவின் முடிவைத் திரும்பப் பெறவும், உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் த.செல்வா, மாணவா் சங்க மாவட்டச் க.பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். வாலிபா் சங்க மாநில துணைத் தலைவா் செ.மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா் வேல்தேவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைமை தபால் நிலையம் முன்பாக அமா்ந்து, மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →