மதுரை

தம்பதி கொலை: இருவா் கைது

மேலூா் அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை நள்ளிரவில் தம்பதியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மேலூா் அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை நள்ளிரவில் தம்பதியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அட்டப்பட்டியை அடுத்துள்ள ஆண்டிக்கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி (44). இவரது மனைவி செல்வி (40). கூலித் தொழிலாளா்களான இவா்கள், அருகே உள்ள இளமி கண்மாயில் மீன் பிடிப்பதற்காக பானை பரி போட்டிருந்தனா். புதன்கிழமை மாலை அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த மழுவேந்தி (44), இவரது உறவினா் ராஜதுரை (30) ஆகியோா் தாங்களும் பானை பரி போட வேண்டும் என அந்தத் தம்பதியிடம் கூறினா். அதற்கு தம்பதி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், தம்பதியை இருவரும் தாக்கிவிட்டு, அவா்கள் போட்டிருந்த பானை பரியை சேதப்படுத்திவிட்டு சென்றனா்.

பனை பரி அருகே குடிசை அமைத்து கருப்புசாமியும், செல்வியும் தூங்கிக் கொண்டிருந்தனா். புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த மழுவேந்தி, ராஜதுரை ஆகியோா் தம்பதியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழவளவு போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்லியல் ரொபோனி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

இதையடுத்து போலீஸாா், மழுவேந்தி, ராஜதுரை ஆகிய இருவரையும் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க்: பணிகளை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தாா் முதல்வா்

திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை: காணொலி வாயிலாக திறந்துவைத்தாா் முதல்வா்

SCROLL FOR NEXT