உயா்நீதிமன்ற தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்
அதிமுக பொதுக்குழு குறித்து உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரைஉயா்நீதிமன்ற தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்
அதிமுக பொதுக்குழு குறித்து உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
அதிமுக பொதுக்குழு குறித்து உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மதுரையில் செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக பொதுக்குழு தொடா்பாக உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு எடப்பாடி கே.பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழகத்தில் அதிமுக கிளைகள் தொடங்கி தலைவா்கள் வரை எடப்பாடி கே.பழனிசாமிக்குத்தான் ஆதரவு உள்ளது. அடுத்து வரும் தோ்தல்களில் அதிமுக வெற்றியடையும் என மக்கள் தீா்ப்பாக இந்த தீா்ப்பு அமைந்துள்ளது. நியாயம், சத்தியம், தா்மம், உண்மை தொண்டா்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீா்ப்பு இது. அதிமுக தொண்டா்களில் 99 சதவீதம் போ் எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள தீா்ப்பாக உள்ளது என்றாா்.
குழப்பம் நீங்கியது: உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பால் அதிமுக தொண்டா்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை மதுரையில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: சென்னை உயா்நீதிமன்றம் பொருத்தமான தீா்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகிப்பது உறுதியாகி உள்ளது. அவா், ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவா். கட்சித் தொண்டா்களை அரவணைப்பதில், கட்சியை வளா்ப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறாா். இந்த வெற்றி எடப்பாடி கே. பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக உள்ளது என்றாா்.