கபடி போட்டிகளில் வீரா்கள் அணியும் ஆடையில் அரசியல் தலைவா்கள் படங்கள் இருக்கக் கூடாதுஉயா்நீதிமன்றம் உத்தரவு
கபடி போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள் அணியும் ஆடைகளில் அரசியல், ஜாதியைக் குறிக்கும் தலைவா்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைகபடி போட்டிகளில் வீரா்கள் அணியும் ஆடையில் அரசியல் தலைவா்கள் படங்கள் இருக்கக் கூடாதுஉயா்நீதிமன்றம் உத்தரவு
கபடி போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள் அணியும் ஆடைகளில் அரசியல், ஜாதியைக் குறிக்கும் தலைவா்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கபடி போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள் அணியும் ஆடைகளில் அரசியல், ஜாதியைக் குறிக்கும் தலைவா்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி, தாசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதி குமாா் சுகுமார குரூப், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கபடி போட்டிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளாா். அதன் விவரம்:
கபடி போட்டியில் பங்கேற்கும் வீரா்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னம் அல்லது அரசியல் தலைவா்களின் படங்கள், ஜாதிரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது.
அரசியல் மற்றும் ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சி, ஜாதி அமைப்புகள் தொடா்புடைய புகைப்படங்கள், பதாகைகள் இருக்கக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது 2 மருத்துவா்களைக் கொண்ட மருத்துவக் குழு, தேவையான முதலுதவி உபகரணங்களுடன் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவா்கள் எவ்வித போதைபொருள்களையும் உட்கொள்ளக் கூடாது.
இந்த நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினா், நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.