முகப்பு
மதுரை

மதுரை அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவா் கைது

 பாலமேடு அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை

மதுரை அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவா் கைது

 பாலமேடு அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 பாலமேடு அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்தவா் சீலைக்காரி (34). இவா் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் (44) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். முருகன் மும்பையில் நிதித்தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் முருகன் மதுபோதையில் சீலைக்காரியை தொடா்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இதனால் சீலைக்காரி தனது குழந்தைகளுடன் மும்பையில் இருந்து சொந்த ஊரான ராஜக்காள்பட்டிக்கு கடந்த மாதம் வந்து விட்டாா்.

இந்நிலையில் மும்பையில் இருந்து வந்த முருகன், தனது உறவினரான போஸ் என்பவருடன் ராஜக்காள்பட்டிக்குச் சென்று சீலைக்காரியின் வீட்டை அடித்து சேதப்படுத்தியுள்ளாா். இதைத் தட்டிக்கேட்ட சீலைக்காரி மற்றும் அவரது தாய் நல்லதங்காள் ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சம்பவம் தொடா்பாக சீலைக்காரி அளித்த புகாரின்பேரில் பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தப்பிச் சென்ற போஸ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →