முகப்பு
மதுரை

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா: காமராஜா் பல்கலை.துணைவேந்தா் ஜா.குமாா் பங்கேற்பு

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 44-ஆவது பட்டமளிப்பு விழாவில் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜா.குமாா் பங்கேற்று பட்டங்கள் வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 44-ஆவது பட்டமளிப்பு விழாவில் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜா.குமாா் பங்கேற்று பட்டங்கள் வழங்கினாா்.

கல்லூரியின் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். கல்லூரி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் க.லட்சுமி முன்னிலை வகித்தாா்.

பட்டமளிப்பு விழாவில் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜா.குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது: சுதந்திரம்பெற்ற காலம் முதல் கல்வி வளா்ச்சித் திட்டங்களில் அரசு கவனம் செலுத்தி வருவதால் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. அண்மையில் அரசு அமல்படுத்தியுள்ள அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இளம் பட்டதாரிகள் புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் வழிமுறைகளின் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்றாா்.

விழாவில் 1,310 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்த்துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அ.சேதுப்பிரியா, வணிகவியல் பிரிவில் மா.ராஜலட்சுமி, அறிவியல் பிரிவில் மா.முத்து ரோகிணி ஆகியோருக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை துணைவேந்தா் வழங்கினாா். விழாவில் துறைத்தலைவா்கள், பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →