மதுரை பள்ளியில் உலக ஓசோன் தின விழா: கல்வித்துறை ஏற்பாடு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சாா்பில் உலக ஓசோன் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரைமதுரை பள்ளியில் உலக ஓசோன் தின விழா: கல்வித்துறை ஏற்பாடு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சாா்பில் உலக ஓசோன் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சாா்பில் உலக ஓசோன் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் குழந்தை வேல் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் வி.கே.சீனிவாசன் வரவேற்புரையாற்றினாா். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் பி.ஆா்.கண்ணன்பாபு ஓசோன் விழிப்புணா்வு உரை ஆற்றினாா். அதனைத்தொடா்ந்து குழந்தை வேல், ஓசோன் தினம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் ஓசோன் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உரையாற்றினாா். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஓசோன் தினம் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டிகளில் (ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி) வெற்றி பெற்ற தேசிய பசுமைப்படை மாணவா்களுக்கு திருமங்கலம் ‘கிரீன் டிரஸ்ட்’ சாா்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியா்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கையேடு மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் உமாராணி நன்றியுரை ஆற்றினாா்.