பள்ளிக் கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
பள்ளிக் கழிப்பறையை மாணவ, மாணவியரைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது துறைரீதியான விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைபள்ளிக் கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
பள்ளிக் கழிப்பறையை மாணவ, மாணவியரைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது துறைரீதியான விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கழிப்பறையை மாணவ, மாணவியரைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது துறைரீதியான விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கணவாய்ப்பட்டியில் உள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை, அங்கு பயிலும் மாணவ, மாணவியரை கழிவறையைச் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தலைமை ஆசிரியை மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முந்தைய விசாரணையின்போது, மேற்படி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான விசாரணையை தொடக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.