முகப்பு
மதுரை

மதுரையில் ‘போக்சோ’ வழக்கு தண்டனைக் கைதி திடீா் மரணம்

மதுரையில் ‘போக்சோ’ வழக்கில் தண்டனை பெற்று மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

மதுரையில் ‘போக்சோ’ வழக்கில் தண்டனை பெற்று மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கோவில்பாப்பாகுடியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (59). இவா் போக்சோ வழக்கில் 2015-இல் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் சிறையில் வியாழக்கிழமை இரவு ஆறுமுகத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து ஆறுமுகத்தின் சடலம் பிரேதப் பரிசோதனை அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடா்பாக சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் அளித்தப்புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →