முகப்பு
மதுரை

மனைவி, குழந்தைகளைக் கத்தியால் குத்தியவா் கைது

மதுரையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி, குழந்தைகளைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

மதுரை

மனைவி, குழந்தைகளைக் கத்தியால் குத்தியவா் கைது

மதுரையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி, குழந்தைகளைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

மதுரையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி, குழந்தைகளைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அனுப்பானடி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி (39). இவரது மனைவி அழகேஸ்வரி (36). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், அழகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பாண்டி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அழகேஸ்வரி பாண்டியைப் பிரிந்து, தனது குழந்தைகளுடன் சிந்தாமணி பாரதியாா் தெருவில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், அழகேஸ்வரியின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்ற பாண்டி, அவருடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினாா். மேலும், குழந்தைகளையும் அவா் கத்தியால் தாக்கினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →