ஞானஒளிவுபுரம் புனித வளனாா் ஆலயப் பெருவிழா: இன்று கொடியேற்றம்
மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளானாா் ஆலயப் பெருவிழா சனிக்கிழமை (ஏப். 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரைஞானஒளிவுபுரம் புனித வளனாா் ஆலயப் பெருவிழா: இன்று கொடியேற்றம்
மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளானாா் ஆலயப் பெருவிழா சனிக்கிழமை (ஏப். 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளானாா் ஆலயப் பெருவிழா சனிக்கிழமை (ஏப். 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளனாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா தொடங்கி நடைபெறுவது வழக்கம். புனித வளனாா், தொழிலாளா்களின் பாதுகாவலராக அறியப்படுவதையொட்டி, தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி புனித வளனாரின் பெருவிழா நடைபெறும்.
இதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கொடியேற்ற விழா திருப்பலியை நிறைவேற்றுகிறாா். இதையடுத்து, பிற்பகல் 5.30 மணிக்குக் கொடியேற்றம் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளான அலங்கார தோ் பவனி வருகிற 30-ஆம் தேதியும், புனித வளனாா் பெருவிழா மே 1-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்கு தந்தை ஆனந்த், பங்கு அருட்பணி பேரவையினா், அன்பியப் பொறுப்பாளா்கள் செய்து வருகின்றனா்.