கைது செய்யப்பட்ட முகமது ரபீக். 
மதுரை

அமைச்சா் போல பேசி பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அமைச்சா் போல பேசி தனியாா் ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

அமைச்சா் போல பேசி தனியாா் ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் தனியாா் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன உரிமையாளரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், அமைச்சரின் உதவியாளா் பேசுவதாகவும், அமைச்சா் பேசுவதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டினாா்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமைப் பொறுப்பாளா் டெலியூஸ் பொ்னான்டஸ் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த முகமது ரபீக் (52) என்பவா் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த அவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT