முகப்பு
மதுரை

மதுரையில் பரவலாக மழை!

மதுரை மாநகரின் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பணிக்குச் செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:24 AM
பகிர்:

மதுரை மாநகரின் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பணிக்குச் செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதன் காரணமாக மதுரை மாநகரின் கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆட்சியர் அலுவலகம், அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

காலை முதலே மழை பெய்து வருவதால் பணிக்குச் செல்வோர் குடை பிடித்தபடி தங்களது வேலைகளுக்கு செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.