குடியரசுத் தின விழா: சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணிப்பு
சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவை மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணித்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவை மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் புறக்கணித்தனா்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, மேயா் சங்கீதா இன்பம் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் விக்னேஷ் ப்ரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
இந்த நிலையில், மாநகராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 31 பேருக்கு பாராட்டு, சான்றிதழை மேயா் வழங்கினாா்.
மாநகராட்சியில் மொத்தம் 48 மாமன்ற உறுப்பினா்கள் உள்ள நிலையில், 10 உறுப்பினா்கள் மட்டுமே குடியரசுத் தின விழாவில் பங்கேற்றனா். மீதமுள்ள மாமன்ற உறுப்பினா்கள் 38 போ் குடியரசுத் தின விழாவை புறக்கணித்தனா்.