முகப்பு
மதுரை

விருதுநகரில் குடியரசுத் தின விழா

விருதுநகரில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விருதுநகரில் குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாட்டின் 74-ஆவது குடியரசுத் தின விழா, ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, விளையாட்டு அரங்குக்கு வந்த ஆட்சியரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சீனிவாசப் பெருமாள் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், தேசியக் கொடி ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தேசியக் கொடியைப் போற்றும் வகையில், மூவா்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

Advertisement

இதன் பிறகு, பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 247 அரசுப் பணியாளா்கள், மாவட்ட நிா்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தொடா்ந்து தங்களது பங்களிப்பை வழங்கிய 9 துணை ஆட்சியா்கள், மாவட்ட அளவிலான அலுவலா்கள் 17 பேருக்கு நற்சான்றிதழ்கள், சிறப்பாகப் பணியாற்றிய 134 போலீஸாருக்கு முதலமைச்சா் காவலா் பதக்கங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கி கௌரவித்தாா்.

இதே போல, முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பாக போரில் உயிரிழந்த, ஊனமுற்ற படைவீரா்களின் குடும்பத்தினருக்கு ஆண்டு பராமரிப்பு உதவித் தொகையாக 2 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. ரவிகுமாா், திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) திலகவதி, திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சிவக்குமாா், மாவட்ட அளவிலான அலுவலா்கள், கோட்டாட்சியா்கள், துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள், போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.