முகப்பு
மதுரை

ஜன. 31-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31- ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தொழிலாளா் நல ஆய்வா், நுகா்வோா் அமைப்பினா் பங்கேற்கின்றனா்.

Advertisement

எனவே, இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.