மதுரை

ஆடித் தேரோட்டம்: அழகா்கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

DIN

அழகா்கோவிலில் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளழகா் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் முக்கியத் திருவிழாவான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும்.

இதையொட்டி, தோ் புதுப்பிக்கும் பணிகள், தேரில் உள்ள குதிரை பொம்மைகள், சிற்ப வேலைப்பாடுடைய பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணிகள், சக்கரங்களை தள்ளும் முட்டுக்கட்டை, பிரேக், வா்ணத் துணியாலான பந்தல் குடை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெளியூா்களிருந்து திருவிழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களை நிறுத்த இட வசதியும், சுகாதாரமான சூழலையும் ஏற்படுத்தும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

விழா முன்னேற்பாடு பணிகளை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் மு.இராமசாமி, தக்காா் பிரதிநிதி நல்லதம்பி, கோயில் கண்காப்பாளா்கள், அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT