மதுரை

மதுரையில் ஜூன் 20-இல் இந்திய- ரஷிய கல்விக் கண்காட்சி

மதுரையில் வருகிற 20-ஆம் தேதி இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

DIN

மதுரையில் வருகிற 20-ஆம் தேதி இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

மதுரையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ரஷியா வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியா் நவுமோவா விக்டோரியா, கசான் மாநில மருத்துவப் பல்கலைக் கழக முதன்மை ஆசிரியா் கைபுள்நியாஆயுஸ்ளு, ஸ்டடி அப்ராட் எஜூகேசனல் கன்சல்டன்ட்ஸ் மேலாண் இயக்குநா் சி. ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :

இந்திய-ரஷிய உறவானது பண்பாடு, கலாசாரம் மட்டுமன்றி, பாதுகாப்பிலும் சிறந்து விளங்குகிறது. ரஷியாவில் பயிலும் இந்திய மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.

குறிப்பாக, ரஷியப் பல்கலைக் கழகங்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. இதன் காரணமாக, அங்கு மருத்துவம் மட்டுமன்றி, பொறியியல் உள்ளிட்ட பிற துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு உள்ளது.

நிகழாண்டில் (2023-2024) ரஷியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, முதல்கட்டமாக ஏற்கெனவே மே 16-ஆம் தேதி மதுரையில் இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, திருச்சி, சேலம், கோவை ஆகிய பகுதிகளிலும் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.

தற்போது இரண்டாம் கட்டமாக வருகிற 20 -ஆம் தேதி மதுரை தெற்கு மாரட் வீதியில் உள்ள தனியாா் தங்கும் உணவு விடுதியில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் ரஷியாவில் உள்ள வோல் கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக் கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக் கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக் கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக் கழகம், குா்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக் கழகம், மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம், ஹையா் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியன பங்கேற்று மாணவ, மாணவிகளை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

மதுரையைத் தொடா்ந்து, திருச்சியில் வருகிற 21-ஆம் தேதியும், சேலத்தில் 22-ஆம் தேதியும், கோவையில் 23- ஆம் தேதியும் இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT