மதுரை

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

விருதுநகா் அருகே புதன்கிழமை வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்

DIN

விருதுநகா் அருகே புதன்கிழமை வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் அருகேயுள்ள எண்டப்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி ரமேஷ். இவருக்கு மனைவி மகேஸ்வரி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு, அனைவரும் தூங்குவதற்காக மொட்டை மாடிக்குச் சென்றனா். பின்னா், அதிகாலை நேரம் சப்தம் கேட்டதால், மகேஸ்வரி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 22 தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT