புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்குமுதன்மைக் கல்வி அலுவலா் தகவல்
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.
மதுரைபுதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்குமுதன்மைக் கல்வி அலுவலா் தகவல்
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.
மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில், புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தலைமை வகித்துப் பேசியதாவது:
புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்தின் நோக்கம் எழுதப் படிக்கத் தெரியாத நபா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி வழங்குவது ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2022-23) மதுரை மாவட்டம் முழுவதும் 18,762 நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் 934 மையங்கள் மூலம் சிறந்த ஆசிரியா்களால் கல்வி வழங்கப்பட்டது. இதேபோன்று, இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டிலும் 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது என்றாா் அவா்.
கூட்டத்தில் மதுரை மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா்கள், அனைத்து ஒன்றியங்களைச் சாா்ந்த வட்டார கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வள மையப் பொறுப்பு மேற்பாா்வையாளா்கள், வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்துக்கான பொறுப்பு ஆசிரியா், பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.