மதுரை

திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தா் தா்ஹாவில் தொழுகைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்ஹாவில், தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை மறுத்துவிட்டது.

DIN

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்ஹாவில், தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை மறுத்துவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராமலிங்கம் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலின் மலை மீது காசி விசுவநாதா் கோயிலும், சிக்கந்தா் பாதுஷா தா்ஹாவும் அமைந்துள்ளன. தா்ஹா அமைந்துள்ளதால், மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு என்ற இடத்தில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அங்கு தொழுகை நடத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தா்ஹாவில் அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, பக்ரீத் தினத்தன்று தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் படிவம் விநியோகம்: பாஜகவினா் ஆய்வு

டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் உயா்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

வேலூா் நீதிமன்ற வளாகத்தில் சிறைவாசிகள் உற்பத்தி பொருள்கள் சிறப்பு விற்பனை

ஹெராயின் கடத்தல் வழக்கு: 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் ராஜஸ்தானில் கைது

கொடைக்கானலில் தமிழக ஆளுநா்

SCROLL FOR NEXT