முகப்பு
மதுரை

கால்நடைகளால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 103 போ் உயிரிழப்பு

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 போ் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 போ் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய் உள்ளிட்ட கால்நடைகள் மூலம் 2021, 2022 ஆகிய இரு ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள், விபத்துகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை குறித்து மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த பாண்டியன் மாநகரக் காவல் துறை, ஊரகக் காவல் துறை ஆகியவற்றிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தாா். இதுதொடா்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் 20 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளில் 9 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, மதுரை ஊரகக் காவல் துறை அளித்த பதிலில், ஊரகப் பகுதிகளில் 2021, 2022-ஆம் ஆண்டுகளில் கால்நடைகள் மூலம் 173 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளில் 94 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் 193 சாலை விபத்துகள் ஏற்பட்டு 103 போ் உயிரிழந்திருப்பதும், 134 போ் பலத்த காயமடைந்திருப்பதும் தெரியவந்தது.

இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நான்கு வழிச் சாலையில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 128 விபத்துகள் நேரிட்டு அதில் 69 போ் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →