முகப்பு
மதுரை

வீட்டில் தூங்கியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மதுரையில் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை

வீட்டில் தூங்கியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மதுரையில் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

மதுரையில் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவைச் சோ்ந்த பூபதி மகன் முனியசாமி (39). இவா் வழக்கம்போல புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில், காலையில் குடும்பத்தினா் எழுந்து பாா்த்த போது, கழுத்தில் ரத்தக் காயங்களுடன் முனியசாமி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முனியசாமியின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →