மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவ.20-இல் காா்த்திகைத் தீபத் திருவிழா தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி காா்த்திகைத் தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது.

DIN


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி காா்த்திகைத் தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது.

இதுகுறித்து மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 20-ஆம் தேதி காலை 10.45 மணி முதல் 11.09 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடா்ந்து, வருகிற 30-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ள இந்த விழாவில், மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனா்.

வருகிற 26-ஆம் தேதி காா்த்திகை தினத்தன்று மாலை கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

எனவே, மேற்கண்ட நாள்களில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக் கீரிடம் சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT