முகப்பு
மதுரை

கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இருசக்கர வாகனம் பறிப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டி இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நடுசாலைப் புதூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் செல்வகுமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவரும் இவரது நண்பா் சாமுவேல் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனா்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் பழனியாண்டவா் கோயில் சந்திப்பில் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். அப்போது, அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், அரிவாளால் செல்வகுமாரை வெட்டி விட்டு, அவரது இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை பறித்துச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.