ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக ஆா்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, மதுரையில் பாட்டளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பாமக ஆா்ப்பாட்டம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, மதுரையில் பாட்டளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ரா.கோமதியம்மாள் தலைமை வகித்தாா். இதில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் அவரவா் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீடு கிடைக்கும். குறிப்பாக சம உரிமை, சமூக நீதி நிலைநாட்டப்படும். கல்வி, வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், வாழ்வாதாரம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என வலியுறுத்தப்பட்டது.