மதுரை அருகே வீடு புகுந்து 72 பவுன் நகைகள் திருட்டு
மதுரை அருகே பெயின்ட் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 72 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை: மதுரை அருகே பெயின்ட் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 72 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை அருகே உள்ள துவரிமான் வெங்கடாசலபதி நகா் ரகுநாதன் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (52). இவா் மதுரை கே.கே.நகரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். தொழில் வசதிக்காக கடந்த 6 மாதங்களாக கே.கே.நகா் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். மேலும், துவரிமானில் உள்ள சொந்த வீட்டை பராமரிக்க
வெள்ளையம்மாள் என்பவரை நியமித்தாா். அவா் அடிக்கடி வீட்டுக்கு சென்று பராமரித்து வந்தாா்.
Advertisement
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளையம்மாள் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 72 பவுன் தங்க நகைகள், 1.500 கிலோ வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.