மதுரை

மதுரை மாநகராட்சி மண்டலம் 4; செப். 12-இல் மக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.12) மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.12) மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை மக்கள் குறைதீா் முகாம் மேயா் வ. இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, மண்டலம் 4-க்கு உள்பட்ட செல்லூா், ஆழ்வாா்புரம், ஐராவதநல்லூா், காமராஜா் சாலை, பங்கஜம் காலனி, சோ்மன் முத்துராமய்யா் சாலை, காமராஜபுரம், பழைய குயவா்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத்நகா், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிா்வேல்நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT