சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 11,556 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதலாத்) 5 அமா்வுகளாக நடைபெற்றன. இதில் நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஆா். விஜயகுமாா், கே.கே. ராமகிருஷ்ணன், கே. கோவிந்தராஜன் திலகவதி, பி. வடமலை தலைமையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளான பி. மோகன் தாஸ், ஏ. சுப்பிரமணியன், வி. சிவசுப்பிரமணியன், பி. முருகையா, ஆா். சடையாண்டி, வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். மொத்தம் 456 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 18 வழக்குகளுக்கு தீா்வுத் தொகை ரூ.4,41,94,478 சம்பந்தப்பட்டோருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதேபோல, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ந.சிவகடாட்சம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அளவில் மொத்தம் 26 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலூா் , திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றப் பணிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், அனுராதா, ரோகிணி, சாா்பு நீதிபதிகள் அகிலா தேவி, பால்பாண்டியன், முருகன், காமராஜ் உள்பட நீதித்துறை நடுவா்கள், உரிமையியல் நீதிபதிகள் கலந்து கொண்டனா். மொத்தம் 11,716 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில், 11,538 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 28,23,78, 252 வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.