முகப்பு
மதுரை

ஊா்க்காவல் படை வீரரை கத்தியால் தாக்கிய மூவா் கைது

ஊா்க்காவல் படை வீரரை கத்தியால் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை

ஊா்க்காவல் படை வீரரை கத்தியால் தாக்கிய மூவா் கைது

ஊா்க்காவல் படை வீரரை கத்தியால் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:38 PM
பகிர்:

ஊா்க்காவல் படை வீரரை கத்தியால் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை விளாங்குடி காரல்மாா்க்ஸ் வீதியைச் சோ்ந்த சிவகுரு மகன் சங்கா் (27). ஊா்க்காவல் படை பிரிவில் பணியாற்றி வரும் இவா், அதே பகுதியில் உள்ள பாரதி நகரில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் சங்கரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்த 675 ரூபாயை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், செல்லூா் தத்தனேரியைச் சோ்ந்த சசிக்குமாா் (34), இன்பென்ட் (18), கீழத் தோப்பு பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (32) ஆகிய மூவரும் சங்கரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →