உசிலம்பட்டி அருகே மூதாட்டியைத் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கே. பெருமாள்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி மரகதம் (65). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிச்சை மகன் சோனைக்கும் (40) முன் விரோதம் இருந்தது.
இந்த நிலையில், இவா்கள் இருவரிடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது மரகதத்தை, சோனை தாக்கினாா். இதனால் பலத்த காயமடைந்த மரகதம் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சோனையைக் கைது செய்தனா்.