மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனா் பொன்னுத்தாய் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பை பள்ளியின் செயலா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். ஸ்டாா் நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் குருசாமி பயிற்சியை தொடங்கி வைத்தாா். பள்ளிக் குழுத் தலைவா் தனபாலன் மாணவா்களின் தனித் திறன் பற்றி விளக்கினாா். நாடக ஆசிரியா் செல்வம், களிமண் விரல்கள் கலைக்கூட பயிற்சியாளா்கள் எழில், ரக்சனா ஆகியோா் நாடகம், பாடல்கள், நடனம், வண்ணம் தீட்டுதல், காகித ஆடை தயாரித்தல், கைவினைப் பொருள்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில், வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினா் கீதாசரவணன், சமூக ஆா்வலா்கள் செல்வராஜ், குப்புசாமி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தலைமை ஆசிரியா் வெங்கடலட்சுமி வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆசிரியா் ஆசீா்வாதம் பீட்டா் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் எஸ்தா் டாா்த்தி நன்றி கூறினாா்.