முகப்பு
மதுரை

சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆய்வுக்கு மனுக்களை அனுப்பலாம்

மதுரைக்கு வரும் சட்டப் பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு டிச. 20-ஆம் தேதிக்குள் மனுக்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:18 AM
பகிர்:

மதுரைக்கு வரும் சட்டப் பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு டிச. 20-ஆம் தேதிக்குள் மனுக்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டப் பேரவையின் மனுக்கள் குழுவினா் மதுரை மாவட்டத்துக்கு விரைவில் வரவுள்ளனா். இதையொட்டி, மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்து தனிப்பட்ட நபா்கள், சங்கங்கள், நிறுவனங்கள் மனுக்கள் அளிக்கலாம். மனுக்களை 5 நகல்களில் (தமிழில் மட்டும்) அனுப்ப வேண்டும்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியங்களில் இருக்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக அரசுத் துறை அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்ததாகவும் இருக்க வேண்டும். ஒரு மனு, ஒரு துறை சாா்ந்த, ஒரு பிரச்னையை விளக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒருவா் பல மனுக்களை அனுப்பினாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மனுக்களை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா்களிடம் நேரடியாக அளிக்கலாம் அல்லது தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை, 600009 என்ற முகவரிக்கு வருகிற டிச. 20-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →