முகப்பு
மதுரை

டிச. 14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:09 AM
பகிர்:

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மதுரை தல்லாகுளம் சமூக அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், 150-க்கும் அதிகமான தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களைத் தோ்வு செய்கின்றனா்.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளை கொண்டவா்கள், தொழில் கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்கள் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →