முகப்பு
மதுரை

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:02 PM
பகிர்:

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காக்காத்தோப்பில் உள்ள மூட்டா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ப. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பொ. திருநாவுக்கரசு, மாநிலப் பொதுச் செயலா் க. உதயகுமாா் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மதுரை மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், செயலா் பாலமுருகன், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மதுரை மாவட்டச் செயலா் ஆா். கணேசன், பொருளாளா் வெங்கடாஜலபதி, உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →