முகப்பு
மதுரை

உத்தபுரம் கலவரம்: 302 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 9:54 PM
பகிர்:

மதுரை: உத்தப்புரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 302 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்:

மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், உத்தபுரம் தெற்குத் தெருவில் தேவேந்திரா் நகா் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008 -ஆம் ஆண்டு ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. இதில், தேவேந்திரா் குல வேளாளா் மக்களது கால்நடைகள், பொருள்கள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

Advertisement

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில், 191 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள 302 பேருக்கு நிவாரணத் தொகை இதுவரை வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.