முகப்பு
இந்தியா

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

Updated On : 23 ஏப்ரல் 2026, 2:56 pm IST
கலவரத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பாதுகாப்புப் படை வீரர்கள் - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அருகே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினரிடையே கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் இரு கட்சியினரும் கற்களை வீசியும், மட்டை போன்ற பொருள்களைக் கொண்டும் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Advertisement

Advertisement

கவலரத்திற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதரி, வாக்குச்சாவடிகளில் சென்று நேரில் ஆய்வு செய்தார். சுமூகமாக வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்யும் வகையில், இவ்வாறு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

summary

Election Commission sought a report from DM DEO on tension between Aam Janata Unnayan Party TMC workers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments